தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

என்னது ஒரு ரூபாய்க்கு பரோட்டா.. 10ரூபாய்க்கு பிரியாணியா? முண்டியடித்த மக்கள்.! - பரோட்டா

தேனி: திறப்பு விழாவை முன்னிட்டு உணவகம் ஒன்றில் ஒரு ரூபாயக்கு பரோட்டாவும், பத்துரூபாய்க்கு பிரியாணியும் வழங்கியதால் அந்த உணவகத்தில் கூட்டம் அலை மோதியது.

முரளி ரெஸ்டாரண்ட்

By

Published : Aug 4, 2019, 7:18 PM IST

Updated : Aug 7, 2019, 12:18 AM IST

தேனி மாவட்டம், பெரியகுளம் பவளம் தியேட்டர் அருகே முரளி ரெஸ்டாரண்ட் என்ற பெயரில் அசைவ உணவகம் புதியதாக இன்று திறக்கப்பட்டது. இந்த உணவகத்தில் திறப்பு விழா சலுகையாக, பரோட்டா ஒரு ரூபாய்க்கும், பிரியாணி 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த தகவல் அறிந்த பெரியகுளம், அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள், சாப்பிடுவதற்காக உணவகத்தில் குவிந்தனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டத்து. .

தனியார் உணவகம் முன்பு குவிந்த பொதுமக்கள்

மேலும் மாலை வரை சலுகை விலையில் உணவு வழங்க உள்ளதால், கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

Last Updated : Aug 7, 2019, 12:18 AM IST

ABOUT THE AUTHOR

...view details