தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது தைலாரம்மன் மலைக்கோவில். இந்த கோவிலைச் சுற்றி அரியவகை மரங்கள்,செடிகள் நிறைந்து காணப்படுகின்றன. இந்நிலையில் வனப்பகுதிகளில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.
தொடர்ந்து தீ கொழுந்துவிட்டு எரிவதால் இந்த வனப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஏக்கரில் உள்ள அரியவகை மூலிகை செடிகள், மரங்கள் எரிந்து நாசம் அடைந்து வருகின்றன.