தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத் தீ - அரியவகை மரங்கள் எரிந்து சேதம்

தேனி: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயால் அரிய வகை மரங்கள் எரிந்து சேதமடைந்தன.

மலைப்பகுதியில் காட்டுத் தீ
மலைப்பகுதியில் காட்டுத் தீ

By

Published : Mar 13, 2020, 7:42 PM IST

Updated : Mar 13, 2020, 11:37 PM IST

தேனி மாவட்டம், மேற்குத்தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டுள்ளது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தற்போது வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால், கடந்த ஒரு வார காலமாக பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் இலட்சுமிபுரம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியைச் சேர்ந்த, சொர்க்கம் வனப்பகுதியில் இன்று காட்டுத்தீ பரவியது. இந்தக் காட்டுத்தீயால் மேற்குத் தொடர்ச்சி மலை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதுகுறித்து தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். இதனால் வனப்பகுதியில் இருந்த பல அரியவகை மரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

மலைப்பகுதியில் காட்டுத் தீ

இதையும் படிங்க: குன்னூர் வனப்பகுதியில் பரவிய காட்டுத்தீ - போராடி அணைத்த தீயணைப்புத் துறை!

Last Updated : Mar 13, 2020, 11:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details