தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனைவியை தாலிக்கயிறுகொண்டு நெரித்துக்கொன்ற குடிமகனுக்கு ஆயுள்: நடந்தது என்ன? - etv bharat

தேனி அருகே மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கிய தேனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உயிரைப் பறித்த தாலிக்கயிரு: தேனியில் நடந்தது என்ன?
உயிரைப் பறித்த தாலிக்கயிரு: தேனியில் நடந்தது என்ன?

By

Published : Dec 21, 2022, 4:23 PM IST

Updated : Dec 21, 2022, 4:32 PM IST

தேனி:ஆண்டிபட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன், அவரது மனைவி சின்னதாய் இருவரும் திம்மரசநாயக்கனூர் ஊராட்சியில் துப்புரவுப் பணியாளர்களாக பணியாற்றி வந்தனர். கடந்த 2015ஆம் ஆண்டு மகளிர் குழுவில் பணம் கட்ட கணவர் வேல்முருகனிடம், மனைவி சின்னதாய் பணம் கொடுத்து அனுப்பியுள்ளார்.

ஆனால், வேல்முருகன் பணத்தைக் கட்டாமல் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த நிலையில் கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டு, வேல்முருகன் மனைவி சின்னதாய் கழுத்தில் போட்டிருந்த தாலி கயிற்றை இறுக்கி கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு உடல்நிலை சரியில்லாமல் இறந்ததாக உறவினர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சின்னத்தாயின் சகோதரர் பாண்டி, சகோதரியின் மரணத்தின் மர்மம் உள்ளது என ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியை கழுத்தை நெரித்துக்கொலை செய்ததாக வேல்முருகன் ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில் வேல்முருகன், அவரது மனைவி சின்னத்தாயை கழுத்தை நெரித்துக் கொலை செய்தது உறுதிப்படுத்தப்பட்டது. வேல்முருகன் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது. அதைக் கட்டத் தவறினால் மேலும் மூன்று மாதம் மெய் காவல் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி சஞ்சய் பாபா தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இதையும் படிங்க:எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் கொடுத்த ஹேப்பி நியூஸ்!

Last Updated : Dec 21, 2022, 4:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details