தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை பகுதியை சேர்ந்த முருகன் - கீதா தம்பதியருக்கு நான்கு வயதில் ஹரிஷ் என்ற மகன் இருந்துள்ளான். இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன் இந்தத் தம்பதியினருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்திருக்கின்றனர். இதில் முருகன் மறவபட்டி பகுதியில் உள்ள பெண் ஒருவரை திருமணம் செய்து அங்கேயே குடியேறி உள்ளார். முருகனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த கீதா, ஒரு வருடம் கழித்து தேவாரம் பகுதியை சேர்ந்த உதயன் என்பவரை திருமணம் செய்துகொண்டு கோம்பை - தேவாரம் சாலையில் தனியே வசித்து வந்துள்ளார். இதனையடுத்து சிறுவன் ஹரிஸை கீதாவின் தந்தை வளர்த்து வந்திருக்கிறார்.
பெற்றோரின் வீட்டருகே அருகே வசித்து வந்த சிறுவன் ஹரிஷ், அவ்வப்போது இருவரது வீட்டிலும் தங்கி வந்துள்ளான். இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு மேல் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால், கீதாவின் சகோதரி ராஜராஜேஸ்வரி பல இடங்களில் தேடியுள்ளார்.