தேனி அருகே உள்ள ரத்தினம் நகரைச் சேர்ந்தவர் வருசை பீர் மைதீன் - நபிலாபேகம் தம்பதியினர். இவர்களது இரண்டரை வயது குழந்தை முகமது நதீனிடம் குழந்தைப் பருவத்திலேயே பழங்கள், பூக்கள் படங்களைக் காட்டி அதன் பெயர்களைக் கூறி விளையாடி மகிழ்ந்து வந்துள்ளனர் குழந்தையின் பெற்றோர். ஆனால் குழந்தையோ விளையாட்டாக இல்லாமல், தனது கூர்மையான அறிவுத்திறனால் அவற்றைக் காணும் போதெல்லாம் மீண்டும், மீண்டும் அதனை உச்சரிக்கத் தொடங்கியுள்ளார்.
ஒரு நிமிடத்தில் 30 நாடுகளின் கொடிகளைப் பார்த்தவுடன் அந்தந்த நாடுகளின் பெயர்களைச் சொல்லும் அளவிற்கு குழந்தையின் ஞாபகத் திறன் அதிகரித்ததுள்ளது. இதற்காக 'வில் மெடல் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்' என்ற சாதனை அமைப்பிலும் குழந்தையின் சாதனை பதியப்பட்டுள்ளது.