தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீச்சல் தெரியாமல் கிணற்றில் குளித்த சிறுவன் பலி! - Theni District important News

தேனியில் நீச்சல் தெரியாமல் சக நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் பலி
நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் பலி

By

Published : Nov 30, 2022, 7:40 PM IST

தேனி:ஆண்டிபட்டி எஸ்விஎஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் உமாராணி, இவருடைய மகன் எட்டாம் வகுப்பு படிக்கும் அபிஷேக்(13). இன்று சக நண்பர்களுடன் சேர்ந்து ஆண்டிபட்டியிலிருந்து முதலக்கம்பட்டி செல்லும் சாலையில் சிவன் காளை என்பவரின் விவசாய கிணற்றிற்கு குளிக்க சென்றுள்ளனர்.

அப்போது அபிஷேக்கு நீச்சல் தெரியாத காரணத்தால் நீரில் மூழ்கி பலியானதாக கூறப்படுகிறது. இதையடுத்து தகவலறிந்து வந்த ஆண்டிபட்டி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஆண்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். பள்ளி மாணவன் விவசாய கிணற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:புதுச்சேரி: யானை லட்சுமி மயங்கி விழுந்த சிசிடிவி காட்சி!

ABOUT THE AUTHOR

...view details