மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த கதிர்வேல் என்பவர் இருசக்கர வாகனத்தில் தேனி மாவட்டம் கம்பம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, கம்பம் எல்லைப் பகுதியின் வலது புறம் திடீரென வாகனத்தை திருப்புகையில், எதிர்பாராதவிதமாக தம்பதியினர் வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் மோதி நிலை தடுமாறியது. அதே நேரத்தில், எதிரே வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து மீது, இரண்டு இருசக்கர வாகனங்களும் பயங்கரமாக மோதின.
இருசக்கர வாகனங்களும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து - இருவர் பலி - தேனி
தேனி: கம்பம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள், பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், சம்பவ இடத்திலேயே இருவர் பலியாயினர்.
இந்த கோர விபத்தில் பேருந்தின் முன்பகுதியில் அமர்ந்திருந்த டிக்கெட் பரிசோதகர் விஜயன் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலே பலியானார். மேலும் இரு சக்கர வாகனத்தில் வந்த தம்பதியினரில், கணவர் சம்பவ இடத்திலே பலியானார்.
இவரது மனைவி, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த கதிர்வேல் ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடம் சென்ற கம்பம் போலீசார், இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியினர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.