தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக பிரமுகர் வீட்டில் 24 சவரன் நகை திருட்டு - எரசையில் அதிமுக பிரமுகர் வீட்டில் கொள்ளை

தேனி: அதிமுக பிரமுகர் வீட்டில் 24 சவரன் தங்க நகை, வெள்ளிக் கொலுசு திருட்டு போனது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

24 shaving jewelry theft in theni
24 shaving jewelry theft in theni

By

Published : Jan 17, 2020, 11:25 PM IST

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகேயுள்ள எரசக்கநாயக்கனூரை சேர்ந்தவர் சமுத்திரவேல். அதிமுக பிரமுகரான இவர், கடந்த 11ஆம் தேதி பேரையூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து இவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதாக உறவினர் தகவல் அளித்துள்ளார்.

அங்கிருந்து விரைந்து ஊருக்கு வந்து வீட்டை திறந்து பார்த்தவர் அதிர்ச்சியடைந்தார். வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த தங்க நகைகள், வெள்ளிக்கொலுசு மற்றும் ரொக்கப்பணம் திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டடது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தடவியல் நிபுணர்களின் உதவியோடு முக்கிய ஆதாரங்களை சேகரித்தனர்.

சின்னமனூர் அருகே அதிமுக பிரமுகர் வீட்டில் திருட்டு

மேலும் அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், வீட்டில் இருந்த 24.5 சவரன் தங்க நகை, வெள்ளிக்கொலுசு மற்றும் ரொக்கப்பணம் ரூ. 80 ஆயிரம் கொள்ளையடித்திருப்பது கண்டறியப்பட்டது. அவற்றின் மதிப்பு சுமார் 5 லட்சம் ரூபாய் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்தத் திருட்டு சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:

திமுக - காங்கிரஸ் கருத்து வேறுபாடு குறித்து கமல்ஹாசன்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details