தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இனியாவது எங்கள் பிள்ளைகள் கல்வி கற்கும்' - பழங்குடி மக்கள் மகிழ்ச்சி! - Theni District news

தேனியில் வருவாய்த்துறையால் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் விரைந்து வீடுகளை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடியின மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேர்வு செய்த இடத்தில் வீடு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.. பழங்குடியின மக்கள் கோரிக்கை
தேர்வு செய்த இடத்தில் வீடு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.. பழங்குடியின மக்கள் கோரிக்கை

By

Published : Nov 27, 2022, 12:03 PM IST

தேனி:பெரியகுளம் அருகே உள்ள அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான ஊரடி, ஊத்துக்காடு, கரும்பாறை மற்றும் குறவன் குளி உள்ளிட்ட வனப்பகுதிகளில் பழங்குடி இனத்தை சேர்ந்த 37 குடும்பங்கள் வீடுகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக அரசால் வீட்டுமனை பட்டா எதுவும் வழங்காத நிலையில், மேற்குத் தொடர்ச்சிமலை பகுதிகளில் உள்ள வனப்பகுதியில் இருக்கும் குகைகள், பாறை இடுக்குகள் மற்றும் குடிசைகளில் அம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், பெரியகுளம் அருகே உள்ள சோற்றுப்பாறை அணைக்கு மேல் உள்ள பகுதியில், வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலத்தை தேர்வு செய்து அதில் பழங்குடியினத்தை சேர்ந்த 37 குடும்பங்களுக்கு வீட்டு மனை வழங்க வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வருவாய்த்துறையால் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் விரைந்து வீடுகளை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடியின மலைவாழ் மக்கள் கோரிக்கை

தொடர்ந்து இதுகுறித்து பழங்குடியின மலைவாழ் மக்கள் கூறுகையில், “வீடுகள் இன்றி வாழ்ந்து வரும் எங்களுக்கு இந்த இடத்தை தேர்வு செய்தது பெரும் மகிழ்ச்சி அளிப்பதோடு, எங்களின் குழந்தைகள் இனிமேலாவது கல்வி கற்று வாழ்க்கை தரம் உயரும் என நம்புகிறோம். இந்த இடத்தில் அரசு விரைவாக வீடு கட்டி தங்களுக்கு வழங்க வேண்டும்” என்றனர்.

இதையும் படிங்க:பட்டப்பகலில் பள்ளியில் புகுந்து மாணவி கடத்தல்.. தேனியில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details