தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சொந்த செலவில் தேசியக்கொடி ஏற்றிய செருப்பு தைக்கும் தொழிலாளிக்குப் பொதுமக்கள் பாராட்டு - theni

சாலையின் ஓரத்தில் உள்ள மரத்தில் தேசியக்கொடியினை ஏற்றி அதன் அடியில் அமர்ந்து செருப்பு தைக்கும் தேனியைச் சேர்ந்த கருப்பையாவின் தேசப்பற்று அனைவரையும் கவர்ந்துள்ளது.

சொந்த செலவில் தேசிய கொடி ஏற்றிய செருப்பு தைக்கும் தொழிலாளி, பொதுமக்கள் பாராட்டு
சொந்த செலவில் தேசிய கொடி ஏற்றிய செருப்பு தைக்கும் தொழிலாளி, பொதுமக்கள் பாராட்டு

By

Published : Aug 14, 2022, 3:47 PM IST

தேனி: இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் வீடுகள், வணிக நிறுவனங்கள், என அனைத்து இடங்களிலும் தேசியக்கொடியினை ஏற்ற வைக்கும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

இந்த நிலையில் தேனியில் காவல் நிலையம் எதிரே சாலையில் அமர்ந்து செருப்பு தைக்கும் தொழிலாளி கருப்பையா, செருப்பு தைத்ததில் கிடைக்கும் குறைவான பணத்தை வைத்து தனது குடும்பத்தை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் தான் தினந்தோறும் அமர்ந்து செருப்பு தைக்கும் இடத்தில் உள்ள மரத்தில் தனது சொந்த செலவில் தேசியக் கொடியினை வாங்கி மரத்தில் கட்டியுள்ளார். இவரின் இந்த செயல் அந்தப் பகுதியின் வழியாக செல்பவர்கள் பலரையும் கவர்ந்துள்ளது.

சொந்த செலவில் தேசியக்கொடி ஏற்றிய செருப்பு தைக்கும் தொழிலாளிக்குப் பொதுமக்கள் பாராட்டு

உணவிற்குக்கூட வழியில்லாத நிலையில் தானும் இந்திய நாட்டு குடிமகன் என்பதை தனது வறுமையிலும் நிரூபித்து வருகிறார், கருப்பையா என மக்கள் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: யானை தந்தம் கடத்தல் - ஒருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details