தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மோப்ப நாய் உதவியுடன் தேக்கு மரம் கடத்த முயன்றவர்களைத் தேடிய வனத் துறை! - theni district latest news

மேகமலை வனச்சரகத்தில் விலை உயர்ந்த தேக்கு, தோதகத்தி உள்ளிட்ட மரங்களை வெட்டி கடத்த முயன்றவர்களை மோப்ப நாய் உதவியுடன் தேடும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டனர்.

meagamalai teak wood smuggle
மோப்ப நாய் உதவியுடன் தேக்கு மரம் கடத்த முயன்றவர்களைத் தேடும் வனத்துறை

By

Published : Nov 2, 2020, 5:39 PM IST

தேனி: மேகமலை வனச்சரகத்திற்குள்பட்ட வெண்ணியாறு வனப்பகுதியில், சுருளி அருவிக்கு அருகே அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று முன்தினம் தேக்கு, தோதகத்தி உள்ளிட்ட மரங்களை வெட்டிக் கடத்த முயன்றனர். அப்போது, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வனத் துறையினரைக் கண்டதும் அவர்கள் வெட்டிய மரங்களை அங்கேயே போட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இதையடுத்து வெட்டப்பட்ட மரங்களை வனத் துறையினர் கைப்பற்றி கம்பம் கிழக்கு வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டுவந்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, மோப்பநாயின் உதவியுடன் மரத்தை வெட்டி கடத்த முயன்றவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வனத் துறையினர்

மரம் வெட்டப்பட்ட இடத்திலிருந்து மோப்பம் பிடித்த பிரின்சி, ஹெட்சா என்ற இரண்டு மோப்ப நாய்கள், சுமார் மூன்று கி.மீ. தூரம் சென்று சுருளியாறு அருகேயுள்ள மின்நிலையப் பகுதிகளில் நின்றது.

இதனால், சுருளியாறு மின்நிலையப் பகுதிக்கு அருகில் உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி ஆகிய கிராமங்களில் கடந்த காலங்களில் வனக்குற்றங்களில் ஈடுபட்டவர்களின் விவரங்களைச் சேகரித்து வனத் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:டிஐஜி அலுவலக வளாகத்திலேயே கொள்ளையர்கள் கைவரிசை; சந்தன மரம் அபேஸ்

ABOUT THE AUTHOR

...view details