அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்காக தேனி பங்களாமேடு பகுதியிலிருந்து தங்கதமிழ்செல்வன் கட்சியினருடன் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர், மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பல்லவி பல்தேவிடம் தனது வேட்பு மனுவை தங்க தமிழ் செல்வன் தாக்கல் செய்தார்.
'எந்த சின்னம் கிடைத்தாலும் அமமுக வெற்றி பெறும்' - தங்க தமிழ்செல்வன்! - ammk
தேனி: "தேர்தலில் எந்த சின்னம் கிடைத்தாலும் அமமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்" என்று, அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ் செல்வன் தெரிவித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் தங்க தமிழ் செல்வன் கூறுகையில், "உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் குக்கர் சின்னம் கிடைக்கவில்லை. எந்த சின்னம் கொடுத்தாலும் அது மக்களிடையே பிரபலம் அடையும். அதிமுக ஆட்சி காலத்தில் தேனி மாவட்டத்திற்கான ரயில்வே திட்டத்தை கொண்டு வரவில்லை. எங்களுக்கு அதிமுக போட்டி கிடையாது, காங்கிரசுக்கும் அமமுகவிற்கும்தான் போட்டி. அண்ணன் ஈவிகேஎஸ் இளங்கோவன் பெரிய மனிதர். மரியாதையாக பேசுகிறார். என்னுடைய நடை, உடை, பாவனை நன்றாக உள்ளது என்று கூறிய அவருக்கு என்னுடைய நன்றி. அவரும் என்னை போல் ஒரு எதார்த்தமான மனிதர்தான்", என்றார்.