தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் 150க்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்வளத்துறை அலுவலர்கள் கண்காணிப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கரோனா தொற்று, ஊரடங்கு காரணமாக வைகை அணையில் கடந்த 15 நாள்களாக மீன்பிடித் தொழில் நிறுத்தப்பட்டது.
இதனால் மீன்பிடித் தொழிலை நம்பியுள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. மேலும் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக வைகை அணை தண்ணீர் சூடாகி மீன்கள் இறக்கும் அபாயம் ஏற்பட்டது.
மீனவர்களின் கோரிக்கையை ஏற்ற அரசு அலுவலர்கள் இதன்காரணமாக தங்களின் வாழ்வாதாரத்தைக் காத்திட அணையில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று வைகை அணை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்ற அலுவலர்கள், கடும் கட்டுப்பாடுகளுடன் வரும் திங்கட்கிழமை முதல் மீன்பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சமூக இடைவெளி கடைபிடிப்பதுடன், வாரத்தில் குறிப்பிட்ட சில நாள்களில் மட்டும் மீன்பிடிக்க அனுமதி வழங்க அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க:ஊரடங்கு உத்தரவால் வீடு தேடி வரும் ரேஷன் பொருள்கள்