தேனி மாவட்டம் மேகமலை வன உயிரின சரணாலயத்திற்குட்பட்ட சுருளி அருவியில் வனத்துறை சார்பில் ரூ.5 நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இந்த நுழைவுக் கட்டணத்தை தற்போது உயர்த்துவதற்கு வனத்துறை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.
சுருளி அருவியில் நுழைவுக்கட்டணம் உயர்வு: சிபிஎம் ஆர்ப்பாட்டம்!
தேனி: சுருளி அருவியில் நுழைவுக்கட்டண உயர்வை கண்டித்து முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கம்பம் வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இந்த புதிய அறிவிப்பில் குழந்தைகளுக்கு ரூ.20, பெரியவர்களுக்கு ரூ.30, புகைப்படம் எடுக்க ரூ.50, வீடியோ எடுப்பதற்கு ரூ.300 வரை வசூலிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டன. வனத்துறையின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்த கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரியகுளம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் லாசர் தலைமையில், கம்பம் காந்தி சிலையில் இருந்து ஊர்வலமாக சென்ற மார்க்சிஸ்ட் கட்சியினர், வனச்சரக அலுவகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, புதிய கட்டண உயர்வை கண்டித்து முழக்கங்கள் எழுப்பியவாறு வனச்சரக அலுவகத்தை முற்றுகையிட்டனர்.