தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் நேற்று முன்தினம் (பிப். 16) நள்ளிரவில், தலை, கை, கால்கள் இல்லாமல் ஆண் சடலத்தை காவல் துறையினர் கைப்பற்றினர். சினிமா பாணியில் பாதி உடலுடன் கைப்பற்றப்பட்ட சடலத்தை மட்டும் வைத்து குற்றவாளிகளை பிடிக்க காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அதில், உயிரிழந்தவர் கம்பத்தைச் சேர்ந்த விக்னேஷ்வரன்(32) என்பதும் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தவர் மது, கஞ்சா போதையில் வீட்டில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது தாய் செல்வி(55), சகோதரர் ஜெயபாரத்(27) ஆகியோர் சேர்ந்து விக்னேஷ்வரனை கொலை செய்து தலை, கை, கால் களை வெட்டி வெவ்வேறு பகுதிகளில் வீசியது கண்டறிப்பட்டது.
கம்பம் இளைஞர் கொலைவழக்கில் இளைஞரின் தாய், சகோதரன் கைது பின்னர் தாய், சகோதரர் இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையை அடுத்து, கம்பம் அருகே வீரநாயக்கன்குளம் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து தலை கைப்பற்றப்பட்டது. மீதி பாகங்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்கள்:சாக்குப் பையில் துண்டு துண்டாக ஆண் சடலம் - மிஷ்கின் பட பாணியில் தேனியில் கொடூரம்!