தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவன் மீட்பு - தீயணைப்புத் துறையினர்

தேனி: போடியில் புறா பிடிக்கும் போது 50 அடி ஆழம் கொண்ட கிணற்றுக்குள் விழுந்த பள்ளி மாணவனை, 2 மணி நேர போராட்டத்துக்கு பின் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

பள்ளி மாணவன்

By

Published : Jul 24, 2019, 7:13 PM IST

தேனி மாவட்டம் போடி மேலச்சொக்கநாதபுரத்தைச் சேர்ந்த செல்வமணியின் மகன் கார்த்திகேயன்(14). இவர் அருகே உள்ள சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை தனது பள்ளி நண்பர்களுடன் இணைந்து அரசு பொறியியல் கல்லூரியின் பின்புறம் உள்ள, தண்ணீர் இல்லாத 50 அடி ஆழம் கொண்ட கிணற்றுக்குள் இறங்கி புறா பிடிக்க சென்றனர்.

கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவன் மீட்பு!

அப்போது, எதிர்பாரத விதமாக கார்த்திகேயன் தவறி கிணற்றுக்குள் விழுந்தார். அதன்பின் அருகே இருந்த அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள், போடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், இரண்டு மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு கார்த்திகேயனை உயிருடன் மீட்டனர். அவருக்கு, காலில் காயம் ஏற்பட்டதால், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details