தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுயம்பு சனீஸ்வர பகவான் கோயில் ஆடி சனிவாரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - saneeswarar temple

தேனி: குச்சனூரில் உள்ள சுயம்பு சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடி சனிவாரத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

சுயம்பு சனீஸ்வர பகவான்

By

Published : Jul 20, 2019, 3:10 PM IST

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது குச்சனூர் கிராமம். தமிழகத்தில் திருநள்ளாறுக்குப் பிறகு, குச்சனூரில் தான் சனீஸ்வரருக்கு ஆலயம் உள்ளது. இங்குள்ள சுரபி நதிக்கரையில் சுயம்புவாக சாந்த சொரூபனாக பக்தர்களுக்கு காட்சி அளித்துவருகிறார் சனீஸ்வரர்.

இதனால் தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வழிபட்டு செல்கின்றனர். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடி மாத சனிக்கிழமைகளில் திருவிழா நடைபெறும். இந்தாண்டிற்கான ஆடி சனி வாரத் திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

கோயில் பிரகாரத்தில் உள்ள கொடிமரத்துக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புனித நீரை கொண்டு, கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு காக்கை உருவம் பதித்த கருநீல கொடி ஏற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெற்றன. பக்தர்கள் எள் தீபம் ஏற்றியும், காகம் உருவம் பதித்த பொம்மைகள், பொறி உள்ளிட்டவைகளையும் படைத்து வழிபட்டனர்.

சுயம்பு சனீஸ்வர பகவான்


இன்று தொடங்கிய திருவிழா ஆடி மாதத்தில் உள்ள அனைத்து சனிக்கிழமைகளிலும் நடைபெறும். மூன்றாவது சனிக்கிழமையன்று நீலாதேவி - சனீஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அதிகமாக வந்து செல்லும் பகுதி என்பதால் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் மருத்துவக் குழுவினர் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details