தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சபரிமலையில் இதுவரை 24 பேர் உயிரிழப்பு - ஆய்வுக்குழு முடிவு என்ன?

சபரிமலையில் இதுவரை 24 பக்தர்கள் உயிரிழந்தது தொடர்பாக சபரிமலை சிறப்பு அலுவலர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.

சபரிமலையில் இதுவரை 24 பேர் உயிரிழப்பு - ஆய்வுக்குழு முடிவு என்ன?
சபரிமலையில் இதுவரை 24 பேர் உயிரிழப்பு - ஆய்வுக்குழு முடிவு என்ன?

By

Published : Dec 21, 2022, 12:07 PM IST

தேனி: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து, விரதம் இருந்து பக்தர்கள் செல்வது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டில் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே சபரிமலை சன்னிதானத்தில், மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்கால சிறப்பு ஏற்பாடுகள் குறித்து சபரிமலை சிறப்பு அலுவலர் பி.விஷ்ணுராஜ் ஐஏஎஸ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், “சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக் காலத்தில் நடை திறக்கப்பட்ட நவம்பர் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை 24 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதில் பெரும்பாலானோர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற உயிரிழப்புகளை தவிர்க்க பக்தர்கள் தவறாமல் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளை மறக்காமல் கொண்டு வரவும், உரிய நேரத்தில் அவற்றை பயன்படுத்தவும் வேண்டும். எனவே மருந்து மாத்திரைகளை பக்தர்கள் பயன்படுத்துவதை அவர்களுக்கு நினைவூட்டும் வகையில், பல்வேறு இடங்களில் மைக் மூலம் அறிவிப்புகள் செய்ய வேண்டும்” என முடிவெடுக்கப்பட்டது.

இதையும் படிங்க:சபரிமலையில் 'வாரிசு' விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details