தேனி: பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர்பிடிப்புப்பகுதிகளான கொடைக்கானல், வட்டக்கானல் உள்ளிட்டப்பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து சற்று அதிகரித்தது.
பெரியகுளம் அருகிலுள்ள கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத்தடை - kumbakarai falls
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப்பயணிகள் குளிக்கத்தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்று(அக்.11) மாலை முதல் நள்ளிரவு வரை அருவியின் நீர் பிடிப்புப்பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக அருவியில் நீர்வரத்து அதிகரித்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு ஏதுவான சூழல் இல்லாத காரணத்தினால், மேலும் மலைகளில் இருந்து வரும் நீரில் பாறைகள் விழும் அபாயம் உள்ளதாலும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புக்கருதி அருவியில் நீர்வரத்து குறைந்து சீராகும் வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், அருவிக்குச் செல்லவும் தடை விதிப்பதாக தேவதானப்பட்டி வனச்சரக அலுவலர் டேவிட் ராஜ் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மாட்டை அடித்துக் கொன்ற சிறுத்தை ; கூண்டு வைத்து பிடிக்க விவசாயிகள் கோரிக்கை