தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதிகுட்பட்ட பாலசமுத்திரம் கம்மவார் சரஸ்வதி நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. இங்கு தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளரும், துணை முதலமைச்சர் ஓ.பின்னீர்செல்வத்தின் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத்குமார் பார்வையிட்டார்.
'ஈவிகேஎஸ் சீனியர்.. நான் அரசியல் கத்துக்குட்டிதான்..!' - ரவீந்திரநாத் குமார் - மக்களவைத் தொகுதி
தேனி: "என்னை விமர்சிப்பதால் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு சந்தோஷம் என்றால் எனக்கு மகிழ்ச்சிதான்" என்று, தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படியே மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், எங்களது தூண்டுதல் இருப்பதாக கூறுவது தவறு. தேனி தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடத்துவதற்கான விளக்கத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் ஏற்கெனவே தெரிவித்துள்ளார். எதிர்கட்சி என்றாலே ஆளும் கட்சி மீது புகார் தெரிவித்துக்கொண்டு தான் இருப்பார்கள். கல்வெட்டு விவகாரம் எனக்கு தெரியாமல் நடந்தது. அது தவறானது, எனவே அது தொடர்பாக புகார் கொடுத்திருக்கிறேன். ஈவிகேஎஸ் இளங்கோவன் மூத்த அரசியல்வாதி. பல தேர்தல் களம் கண்டவர். நான் இப்போதுதான் வந்திருக்கிறேன். என்னைப் பற்றி அவர் விமர்சிப்பது குறித்து நான் பலமுறை சிந்தித்துள்ளேன். என்னை விமர்சிப்பதால் அவருக்கு சந்தோஷம் கிடைத்தால் எனக்கு அது மகிழ்ச்சிதான்", என்று தெரிவித்தார்.