தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கண்ணகி கோயில் விவகாரம்: ரவீந்திரநாத் குமார் முன்னுக்குப்பின் முரணாக கருத்து... - cumbum theni

கண்ணகி கோயில் விவகாரத்தில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் முன்னுக்குப் பின் முரணாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

கண்ணகி கோவில் விவகாரம்: ரவீந்திரநாத் குமார் முன்னுக்குப்பின் முரணாக கருத்து
கண்ணகி கோவில் விவகாரம்: ரவீந்திரநாத் குமார் முன்னுக்குப்பின் முரணாக கருத்து

By

Published : Dec 16, 2022, 10:22 PM IST

கண்ணகி கோவில் விவகாரம்: ரவீந்திரநாத் குமார் முன்னுக்குப்பின் முரணான கருத்தைத் தெரிவிக்கிறார் என ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

தேனி: கம்பம் அரசு மருத்துவமனையில் செவிலியர் மருத்துவமனைக்குள் தங்களுக்கு தங்கும் அறை வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர். இதனைத் தொடர்ந்து கம்பம் சட்டப்பேரவை தொகுதி நிதியில் இருந்து ரூ.12 லட்சம் செலவில் கட்டிடம் கட்டப்பட்டு முடிவுற்றது.

இதனை, கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் ராமகிருஷ்ணன் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழக - கேரளா எல்லையில் அமைந்துள்ள கண்ணகி கோயில் தமிழ்நாட்டிற்குரியது என மூன்று வகையான ஆய்வுகளின் மூலம் தொல்லியல் துறையினர் நிரூபித்துள்ளனர்.

எனவே அது தமிழ்நாட்டைச் சேர்ந்தது என்று சிலப்பதிகாரம் முதல் இன்று வரை உள்ள தொல்லியல் ஆய்வாளர்கள் கூறும் கருத்து ஆகும்” என்றார். மேலும், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் வைத்து தன்னுடைய கருத்தை முன்னுக்கு பின் முரணாக கூறியுள்ளார்.

அதுவும் தமிழ்நாடு அரசு கண்ணகி கோயிலை இந்து அறநிலை துறைக்கு கீழ் கொண்டு வரும் வேளையில், இந்த மாதிரி கருத்துக்களை கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது கண்ணகி கோயிலை புராதான சின்னமாக அறிவிக்க கூறியுள்ளார்.

ஆனால் கண்ணகி கோயில் புராதான சின்னமாக அறிவிக்காமல் பொதுமக்கள் வழிபடும் அம்மன் ஆலயமாகத்தான் அறிவிக்க மாநில அரசு முயற்சி செய்து கொண்டுள்ளது என கூறினார்.

இதையும் படிங்க: பொதுக்குழுவிற்கு தயாராகும் ஓபிஎஸ்.. அதிமுகவில் நடப்பது என்ன?

ABOUT THE AUTHOR

...view details