கரோனா நோய் பரவல் காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊடரங்கு உத்தரவு தொடர்ந்து 50 நாள்களுக்கும் மேலாக நீடிக்கிறது. இதனால் கடைகள், தொழில், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டதால் பலரும் வேலை வாய்ப்பு கிடைக்காமல் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.
இவர்களுக்கு தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் தங்களால் இயன்ற உதவிகளை செய்துவருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற வர்த்தக அணி சார்பில் ஊரடங்கால் நலிவடைந்தவர்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கி உதிவிக்கரம் நீட்டியுள்ளனர். சலலைத் தொழிலாளர்கள், முடி திருத்துவோர், ஆட்டோ ஓட்டுநர்கள், புகைப்படக் கலைஞர்கள், வயது முதிர்ந்தவர்கள் என நலிவடைந்த 150 நபர்களுக்கு ரூ. 1000 மதிப்பிலான அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட 21 வகையான பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. தகுந்த இடைவெளியை கடைபிடித்து முகக் கவசம் அணிந்தவாறு பொருட்களை மக்கள் பெற்றுச் சென்றனர்.