தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது க.புதுப்பட்டி கிராமத்தில் தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறி அப்பகுதி பொதுமக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் நேற்றிரவு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
குடிநீர் இல்லாமல் தவிக்கும் மக்கள்!
தேனி: கம்பம் அருகே 10 நாட்களுக்கு மேல் குடிநீர் விநியோகம் செய்யவில்லை என்று பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியல்
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், பல முறை அதிகாரிகளிடம் இதுசம்பந்தமாக புகார் கூறியும் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தான் நாங்கள் சாலை மறியலில் ஈடுபட்டோம். எங்களுக்கு குடிநீர் வழங்கவில்லை என்றால் எங்கள் போராட்டம் மீண்டும் தொடரும் என்று தெரிவித்தனர். இந்த திடீர் சாலை மறியலால் குமுளி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடம் வரை போக்குவரத்து பாதிப்படைந்தது.