கரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகின்றது. நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த தமிழ்நாடு அரசோ, நேற்று முன் தினம் (மே 7) முதல் மதுபான கடைகள் செயல்படுவதற்கு அனுமதி அளித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தேனி மாவட்டம் கம்பம் நகரில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் மதுபானகடைகள் திறக்கப்பட்டதற்கு எதிராக கண்டன பதாகைகளை ஆங்காங்கே தொங்கவிட்டுள்ளனர்.