தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை மீறும் கேரள அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்! - kerala government

தேனி: முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கட்டடங்கள் அமைக்கக் கூடாது என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை மீறும் கேரள அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

போராட்டம்

By

Published : Feb 22, 2019, 2:55 PM IST

தேனி மாவட்டம் மட்டும் இல்லாமல் இன்னும் ஐந்து மாவட்டகளின் நீர் ஆதாரமான முல்லை பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியான ஆனைவாசல் பகுதியில் கேரள வனத்துறை, கார் பார்க்கிங் அமைக்கும் பணிகளை தொடங்கி உள்ளது.பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி இந்த நீர் தேக்கப்பகுதிகளில் எந்த ஒரு கட்டுமானப் பணியையும் செய்யக்கூடாது. ஆனால் கேரள வனத்துறையினரோ அந்த உத்தரவை மீறி தற்போது கார் பார்க்கிங் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 1980-ம் ஆண்டு தமிழக கேரள ஒப்பந்தத்திற்குப் பிறகு ஆரம்பிக்கப்பட்ட கேரள அரசின் இந்த நில ஆக்கிரமிப்பு நடவடிக்கை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

பேபி அணையைப் பலப்படுத்தினால் தான் 152 அடி தண்ணீரை பெரியாறு அணையில் தேக்க முடியும். இந்த இக்கட்டான நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை மீறி, மீண்டும் மீண்டும் நீர்தேக்கப்பரப்பு பகுதிகளில் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமானப் பணிகளால் ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இத்தகைய செயல்களில் ஈடுபடும் கேரள அரசை கண்டித்து ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில், உத்தமபாளையம் பைபாஸ் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நட்த்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details