தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தேவையில்லாமல் சுற்றாதீர்கள்' மக்களை நிறுத்தி காணொலி மூலம் விழிப்புணர்வு!

தேனி: சாலையில் சுற்றித்திரிந்த மக்களை சமூக இடைவெளியில் நிற்க வைக்க காணொலி மூலம் காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

corona awareness
corona awareness

By

Published : Mar 31, 2020, 6:07 PM IST

கரோனா வைரஸ் எதிரொலியால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசியத் தேவைகளை தவிர வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் வைரஸ் குறித்த அச்சமின்றி மக்கள் சாலைகளில் சுற்றித்திரிவது, பொது இடங்களில் ஒன்றுக்கூடவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இதைக் கட்டுப்படுத்த அரசு, காவல் துறையினர் பல்வேறு முயற்சிகளை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், தேனி மாவட்டம் கம்பம் நகரில் அத்தியாவசிய தேவையின்றி இரு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த 50க்கும் மேற்பட்ட நபர்களை சமூக இடைவெளியில் நிற்க வைத்தனர்.

மக்களை நிறுத்தி காணொலி மூலம் விழிப்புணர்வு

அதைத் தொடர்ந்து அவர்களுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள வைரஸ் குறித்த விழிப்புணர்வு காணொலியை போட்டு காண்பித்து அறிவுரை வழங்கினர். மேலும், மக்கள் கைகளைச் சுத்தமாக கழுவ வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. முகக்கவசம் இல்லாமல் வந்தவர்களுக்கு இலவசமாக முகக்கவசங்களும் காவல்துறை சார்பாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'தொழிலாளர்கள், மாணவர்களின் வீடு வாடகைக்கு நோ' - தமிழ்நாடு அரசு!

ABOUT THE AUTHOR

...view details