தேனி மாவட்டத்தில் கரோனா வைரஸால் 40 பேர் பாதிப்படைந்துள்ளனர். அவர்களில் போடியைச் சேர்ந்தவர்கள் 30 பேர், பெரியகுளத்தைச் சேர்ந்தவர்கள் 4 பேர், தேனி நகரில் 3 பேர், சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் பகுதிகளில் தலா ஒருவர் வீதம் மொத்தம் 40 பேர். அதில் போடியைச் 54 வயது பெண்மணி சிகிச்சைப் பலனின்றி அண்மையில் உயிரிழந்தார். 18 பேர் குணமடைந்து நேற்று (ஏப்ரல் 16) வீடு திரும்பினர்.
பெரியகுளத்தை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் காவல்துறையினர் - தமிழ்நாட்டில் கரோனா
தேனி: ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்க ட்ரோன் கேமராவை காவல்துறையினர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பெரியகுளம் பகுதியில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேறுவதை கட்டுப்படுத்த அப்பகுதி காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அதன்படி, கரோனா வைரஸ் எமன் போல் சித்தரிக்கப்பட்ட ஓவியத்தை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதைத்தொடர்ந்து ட்ரோன் கேமராவைப் பயன்படுத்தி பெரியகுளம் தென்கரை, காந்தி சிலை, அம்பேத்கர் சிலை, வடகரை, அரண்மனைத் தெரு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:கரோனா பாதிப்பு – 18 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்