பொதுவாகவே மக்களிடம் மீம்ஸ்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு. கிண்டல், கேலி, நகைச்சுவைக்கு இவை பயன்படுத்தப்பட்டு வரும் சூழலில், மீம்ஸ்களை வைத்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது தேனி மாவட்டக் காவல்துறை.
தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் மீம்ஸ்களை காவல்துறையினர் பதிவேற்றம் செய்கிறார்கள். அதனை பொதுமக்கள்பலரும்பதிவிறக்கம் செய்து தேனி மாவட்ட வாட்ஸப் குழுக்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
இதுகுறித்து, காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், பல மாவட்டங்களில் இது போன்று காவல்துறை சார்பில் மீம்ஸ்கள் உருவாக்கி, மக்களிடையே பகிரப்படுகிறது. நகைச்சுவை மீம்ஸ்களுக்கு மத்தியில் இதுபோன்ற விழிப்புணர்வு மீம்ஸ்களை மக்கள் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள்.