தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பூக்காரர் தெருவை சேர்ந்தவர் மதுரைவீரன். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு அதே பகுதியில் வசித்து வந்த 15 வயது சிறுமியை பாலியல் வன்புனர்வு செய்ததாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணை முடிவுற்று இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அதில், சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளி மதுரைவீரனுக்கு 30 ஆண்டுகள் சிறைதண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராத தொகையை கட்டத் தவறினால் மேலும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி கீதா தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கும் தமிழ்நாடு அரசு இழப்பீடாக ஏழு லட்சம் ரூபாய் வழங்கிட வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இதையும் படிங்க: பவானியாற்றின் நீர்த்தேக்கத்தில் முதலை வேட்டை: ஒருவர் கைது, மற்றொருவர் தப்பியோட்டம்!