தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெட்ரோல் திருட்டு வழக்கு - இளைஞர் தற்கொலை - youth suicide

தேனி: ஆண்டிப்பட்டி  அருகே பெட்ரோல் திருட்டு வழக்கு விசாரணைக்கு பயந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்தியமூர்த்தி

By

Published : Aug 4, 2019, 2:39 AM IST

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வருசநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அடிக்கடி இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருட்டு நடப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் செய்து வந்தனர். இது குறித்து, வருசநாடு பகுதியைச் சேர்ந்த ஆசைத்தம்பி என்பவரின் மகன் சத்தியமூர்த்தியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும், பெற்றோருடன் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தினர்.

இந்நிலையில், காவல்துறையினரின் விசாரணைக்கு பயந்து வீட்டில் யாரும் இல்லாத நேரம் சத்தியமூர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெட்ரோல் திருட்டு வழக்கு - இளைஞர் தற்கொலை

இதனையடுத்து, உறவினர்கள் 200க்கும் மேற்பட்டோர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்பு சத்தியமூர்த்தியின் தற்கொலைக்கு காரணமான காவல்துறையை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details