தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சின்னஓவலாபுரத்தைச் சேர்ந்த சின்னவர் என்பவரின் மகன் நிஷாந்த்(29). இவர் கடந்த 2014ஆம் ஆண்டு கம்பம் பேருந்து நிலையத்தில் மதுபோதையில் சுற்றித் திரிந்துள்ளார். அப்போது பேருந்து நிலையத்திற்கு வந்த அரசுப்பேருந்தை மறித்து ரகளையில் ஈடுபட்டு, பேருந்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி, ஓட்டுநரைத் தாக்கியுள்ளார்.
இதுகுறித்து அரசுப்பேருந்து ஓட்டுநர் பகவத்சிங் அளித்த புகாரில் பேரில், கம்பம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நிஷாந்தை கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர். இவ்வழக்கின் விசாரணை 5 ஆண்டுகளாக தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது.