தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட மூன்றாவது வார்டு காந்திநகர் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இங்குள்ள முதல் தெருவில் குடியிருப்புகளுக்கு மத்திய பகுதியில் தனியார் செல்போன் நிறுவனம் (ஜியோ) புதிய உயர்மின் கோபுரம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறது. ஒரு மாத காலமாக நடைபெற்றுவரும் இப்பணியில் முதற்கட்டமாக அடித்தளம் அமைத்த பிறகே உயர்மின் கோபுரம் அமையவிருப்பது பொதுமக்கள் அனைவருக்கும் தெரியவந்தது.
'வேண்டாம்... வேண்டாம்... உயர்மின் கோபுரம் வேண்டாம்!' - protest
தேனி: ஆண்டிபட்டியில் தனியார் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் உள்பட பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது, உயர்மின் கோபுரம் அமைக்கும் கருவிகளை ஏற்றிவந்த வாகனத்தையும் தடுத்துநிறுத்தி, திருப்பியனுப்பினார்கள்.
இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர், ஆண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்திருந்த நிலையில், தனியார் நிறுவனம் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டதால் பொதுமக்கள் நள்ளிரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆண்டிபட்டி நகரில் பரபரப்பு ஏற்பட்டது.