தேனி: கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது. பொதுமக்கள் தங்களது இல்லத்தில் இறந்தவர்களுக்கு அர்ப்பணம் கொடுத்து வழிபாடுகளை நடத்திட நாள்தோறும் இங்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் தை மாதம், ஆடி மாதம் அமாவாசை நாட்களில் இறந்த தங்களது முன்னோர்களுக்கு சுருளி ஆற்றில் தர்ப்பணம் செய்வது வழக்கம். ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலையே ஏராளமான பக்தர்கள் சுருளி அருவியில் குவிந்தனர். பக்தர்கள் சுருளி அருவியில் நீராடி பின்டம் வைத்து எள் தண்ணீர்விட்டு தங்களது முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டி சம்பிரதாயங்களை செய்தனர்.