தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத்தேர்தல், 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுகின்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பை அக்கட்சி வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று, தேனியில் வேட்பாளர்கள் அறிவிப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தேனி அருகே நடைபெற்ற கூட்டத்தில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தேனி எம்.பி., பார்த்திபன், எம்எல்ஏக்கள் ஜக்கையன்உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.