தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிபட்டியை சேர்ந்த சூர்யா (23) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த நாகராஜ் (23) இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இருவரும் நேற்று (டிசம்பர் 22) சுருளிப்பட்டியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் சுருளி அருவிக்கு சென்று கொண்டிருக்கும் போது முன்னால் சென்ற பேருந்தை முந்தி செல்ல முயன்றனர்.
அப்போது சுருளி அருவியில் இருந்து ஐயப்ப பக்தர்களை ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி வந்த வேன் எதிர்பாராத விதமாக மோதியதில் இருவரும் தூக்கி எறியப்பட்டனர். இருவரும் பலத்த காயம் அடைந்த நிலையில் 108 வாகனத்தின் மூலம் கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.