தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி இ-பாஸ் பயன்படுத்திய ஆம்னி பேருந்துகள் பறிமுதல் - நான்கு பேர் கைது! - தேனி மாவட்ட செய்திகள்

தேனி: போலி இ-பாஸ் மூலம் தேனியில் இருந்து மஹாராஷ்டிராவுக்கு சென்று வந்த இரண்டு ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், இது குறித்து பேருந்து உரிமையாளர் உள்பட, நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

omni-buses-confiscated-by-fake-e-pass-four-arrested
omni-buses-confiscated-by-fake-e-pass-four-arrested

By

Published : May 23, 2020, 11:46 PM IST

கரோனா நோய் தொற்று காரணமாக வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து தேனி வருபவர்களை மாவட்ட எல்லைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை – தேனி மாவட்ட எல்லையான ஆண்டிபட்டி கனவாய் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், மதுரையில் இருந்து வந்த இரண்டு ஆம்னி பேருந்துகளை சோதனை செய்தனர்.

அதில் மஹாராஷ்டிரா மாநிலம் தாராவி பகுதியில் இருந்து தேனி மாவட்டத்திற்கு ஆட்களை ஏற்றி வந்தது தெரியவந்தது. மேலும் பேருந்தில் இருந்த இ - பாஸ் போலியானது என விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து ஓட்டுநர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், போலி இ - பாஸ் மூலம் மும்பைக்கு இரண்டு முறை சென்று ஆட்களை ஏற்றி வந்தாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதையடுத்து பேருந்துகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், அதன் உரிமையாளர் சண்முகநாதன், மேலாளர் செந்தில்குமரன், ஓட்டுநர்கள் ராமையா, பிச்சைமணி ஆகிய 4 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். மேலும் பேருந்துகளில் பயணித்த 62 பேரும் மருவதுவ பரிசோதனை செய்யப்பட்டு, முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:வீரர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை வெளியிட்ட ஐசிசி!

ABOUT THE AUTHOR

...view details