தேனி வட்டாச்சியர் அலுவலகம் அருகே உள்ள உழவர் சந்தையில் ஜூன் 22ஆம் தேதி மூதாட்டி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பசை தடவி, வாய் மற்றும் கழுத்தில் கயிறு கட்டப்பட்டு இறுகிய நிலையில் சடலமாக கிடந்த அவரை, காவல் துறையினர் மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், மூதாட்டியின் பெயர் சாந்தியம்மாள் என்பதும் இவர் கணவனை பிரிந்து தனியே வாழ்ந்து வந்ததும் கண்டறியப்பட்டது.
மேலும் மூதாட்டியின் மரணத்தில் சந்தேகம் அடைந்த காவலர்கள், தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ், மணிகண்டன் ஆட்டோ ஓட்டுநர்கள் இருவரை கைது செய்து விசாரித்தனர். ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்கில் தொடர்புடைய மணிகண்டன் என்பவரிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மூதாட்டியின் மரணத்தில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.