தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனி அருகே போலி உரம் தயாரித்துவந்த நிறுவனத்திற்கு சீல்! - fake fertilizer

தேனி: கோம்பைப் பகுதியில் இயற்கை உரம் என்ற பெயரில் போலியான உரம் தயாரித்து விற்பனை செய்துவந்த நிறுவனத்தை தேனி தரக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் பூட்டி சீல்வைத்தனர்.

போலி உரம் தயரித்து வந்த நிறுவத்திற்கு சீல்

By

Published : Jul 24, 2019, 7:21 PM IST

தேனி மாவட்டம் கோம்பை காலனி பகுதியில் உள்ள தனியார் கட்டடத்தில் ஆர்கானிக் உரங்கள் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டுவந்தது. இந்நிறுவனத்தில் இயற்கை உரம் என்ற பெயரில் போலியான உரம், வேளாண் மருந்துகள் தயரித்து விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து, அங்கு சென்று காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையில், ஆர்கானிக் உரங்கள் தயாரிப்பதாகக் கூறி அனுமதியின்றி ரசாயன உரங்கள் விற்பனை செய்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வேளாண்மைத் துறை அலுவலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தேனி தரக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் நடத்திய ஆய்வில், ஆர்கானிக் உரம் தயரிப்பதாக கூறி ரசாயனங்கள் கலந்து உரம் தயாரித்து கொண்டிருந்ததும், மேலும் அரசு அங்கீகாரம் பெறாமல் முறையற்ற வகையில் உரம் விற்பனை செய்து வந்ததும், உறுதியானது.

பின்னர், அங்கிருந்த உர மாதிரிகளை சேகரித்து அதனை பரிசோதனைக்கு உட்படுத்தவதற்கு எடுத்துச் சென்றனர்.

போலி உரம் தயாரித்துவந்த நிறுவனத்திற்கு சீல்

இதையடுத்து, நிறுவன உரிமையாளர் அனிஷ் ஆண்டனி கைது செய்யப்பட்டு, போலி உரம் தயாரித்துவந்த கட்டடத்தை பூட்டி அலுவலர்கள் சீல் வைத்தனர். மேலும் இது குறித்து கோம்பை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உரங்கள் எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது, எந்தெந்த பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது என விசாரணை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details