தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தங்க தமிழ்ச்செல்வன், ராஜ கண்ணப்பனை வைத்துக்கொண்டு திமுகவை முட்டுக்கொடுக்கும் ஸ்டாலின்!' - எம்.பி. ரவீந்திரநாத் குமார் - திமுகவை விமர்சனம் செய்த ஓ பி ரவீந்திரநாத்

தேனி: பிற கட்சிகளைத் தூண்டிவிட்டு குறுக்குவழியில் ஆட்சியைப் பிடிக்க முயலும் திமுக ஒரு தில்லுமுல்லு கட்சி என்று தேனியில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மக்களவை உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் விமர்சனம் செய்தார்.

O P Raveendranath slams stalin and Dmk in ADMK meeting
O P Raveendranath slams stalin and Dmk in ADMK meeting

By

Published : Feb 23, 2020, 10:58 PM IST

தேனி மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் கொண்டாத்திற்கான செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்காகப் பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் குமார், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜக்கையன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய ஓ.பி. ரவீந்திரநாத் குமார், "எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டதுபோல, ஜெயலலிதாவின் 75ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போதும் அதிமுக ஆட்சியில் இருக்க வேண்டும். மேலும் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியைப் பிடிக்க முடியாததால் இந்த ஆட்சியை எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என்று தினமும் ஒரு பேரணி, ஆர்ப்பாட்டம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் நடத்திக்கொண்டிருக்கிறார்.

பிற கட்சிகளையும் தூண்டிவிட்டு குறுக்குவழியில் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார். திமுக என்றால் தில்லு முல்லு கட்சி, ஜெயலலிதாவால் பதவி கொடுக்கப்பட்டு அழகு பார்க்கப்பட்ட ராஜகண்ணப்பன், தங்கதமிழ்ச்செல்வன் போன்றோர் சிறைக்குச் செல்ல காரணமாக இருந்த திமுகவில் போய்ச்சேர்கின்றனர். இவர்களை வைத்துக்கொண்டு திமுகவை முட்டுக்கொடுக்கும் பணியில் ஸ்டாலின் ஈடுபட்டுவருகிறார்" என்று கூறினார்.

திமுகவை விமர்சனம் செய்த ஓ.பி. ரவீந்திரநாத் குமார்

இதையும் படிங்க:ஐ.பி.எஸ் அலுவலர்களுக்கு பதவி உயர்வு - தமிழ்நாடு அரசு உத்தரவு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details