தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் ஆள்மாறாட்ட வழக்கு - முக்கிய இடைத்தரகரிடம் சிபிசிஐடி விசாரணை - neet exam issue

தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு தொடர்பாக சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்து சிறையில் அடைக்கப்பட்ட முக்கிய இடைத்தரகரை நீதிமன்றக் காவலில் எடுத்து தேனி சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீட் ஆள்மாறாட்ட வழக்கு - முக்கிய இடைத்தரகரிடம் சிபிசிஐடி விசாரணை
நீட் ஆள்மாறாட்ட வழக்கு - முக்கிய இடைத்தரகரிடம் சிபிசிஐடி விசாரணை

By

Published : Feb 21, 2020, 1:09 PM IST

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக தேனி அரசு மருத்துவக் கல்லூரியை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் ஆகிய இருவரும் முதன்முதலாக கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அடுத்தடுத்து சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதுவரை 6 மாணவர்கள், அவர்களின் பெற்றோர் 6 பேர், இடைத்தரகர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே நீட் ஆள்மாறாட்டத்திற்கு மூளையாக செயல்பட்ட இடைத்தரகர் முகமது ரசீத் மற்றும் அவருடன் நேரடி தொடர்புடைய முக்கிய இடைத்தரகர் வேதாச்சலம் ஆகிய இருவர் மட்டும் கடந்த நான்கு மாதங்களாக தலைமறைவாக இருந்தனர்.

இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இடைத்தரகர் வேதாச்சலம், அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி சேலம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதனைத் தொடர்ந்து 20ஆம் தேதி வரை இவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து அவர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

நீட் ஆள்மாறாட்ட வழக்கு - முக்கிய இடைத்தரகரிடம் சிபிசிஐடி விசாரணை

இந்நிலையில் தேனி சிபிசிஐடி போலீசார், சேலம் சிறையிலிருந்த வேதாச்சலத்தை தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணைக்காக ஆறு நாட்கள் நீதிமன்றக் காவலில் எடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் தேனி சமதர்மபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு வந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் நீட் ஆள்மாறாட்டத்திற்கு மூளையாக செயல்பட்ட முகமது ரஷீத் எங்கு உள்ளார் என்பது குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details