குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, திருச்சியில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தமிழ்நாடு அரசு சி.ஏ.ஏ.க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், என்.பி.ஆர், என்.சி.ஆர் ஆகியவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்தக்கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி - தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் 300க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் நேற்று இரவு திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுங்க' - திருச்சியில் விடிய விடிய தொடர்ந்த போராட்டம்!
திருச்சி: குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நேற்று இரவு முதல் தொடர் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இஸ்லாமியர்கள் தொடர் போராட்டம்
மேலும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று காலையும் இப்போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் காவல்துறை அப்பகுதியில் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:கொரோனா வைரஸ் பீதியில் ராமேஸ்வரத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட சீனப் பயணி