தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டப்பேரவை தொகுதி மக்களுக்கு அரசின் பல்வேறு துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (பிப்.17) நடைபெற்றது. இதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆட்சியர் பல்லவி பல்தேவ், தேனி எம்பி ஓ.பி.ரவீந்திரநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது, சமூக நலத்துறை, கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்புத் துறை சார்பில் ஆயிரத்து 223 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில், வீட்டுமனை பட்டா, கோழி குஞ்சுகள், திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பின்னர் விழாவில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், "ஆண்டுக்கு நான்கு மாதம் மட்டுமே வேலை வாய்ப்பு கிடைத்திருந்த ஆண்டிபட்டி நெசவாளர்களின் துயர் துடைத்திட அரசின் இலவச வேஷ்டி, சேலை வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டு முழுவதும் சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதி நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து வருகிறது.