கேரள மாநிலம் தேக்கடியில் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது. அணையின் நீர்த்தேக்கப் பகுதிகளில் கேரள அரசு சார்பாக படகு சவாரிகள் இயக்கப்படுகின்றன.
முல்லைப் பெரியாறு அணைக்கு படையெடுத்த வனவிலங்குகள்! - வனவிலங்குகள்
தேனி: முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதிகளில் உலாவரும் வனவிலங்குகளை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
File pic
தற்போது அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து இருப்பதால் வனப்பகுதியில் உள்ள வன விலங்குகள் தண்ணீருக்காக அணையின் நீர் தேக்கப் பகுதிக்கு அதிகமாக வருகின்றது.
காட்டு மாடுகள் கூட்டம் கூட்டமாகவும் யானைகள் தங்களது குட்டிகளுடனும் தண்ணீர், உணவுக்காக நீர்த்தேக்கப் பகுதிகளுக்கு வருகின்றன. இதனை படகு சவாரி மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள் வன விலங்களை ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர்.