கேரள மாநிலம் தேக்கடியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை தமிழ்நாட்டின் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இதன் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அணையை கண்காணித்து பராமரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்தது. அந்த குழுவுக்கு உதவியாக 5 பேர் கொண்ட துணை கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டது. அதன் தலைவராக மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் உள்ளார். அதன் தமிழ்நாடு பிரதிநிதிகளாக செயற் பொறியாளர் சுப்பிரமணி உள்ளார்.
முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு! - தேக்கடி
தேனி: கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் முல்லை பெரியாறு அணையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், முல்லை பெரியாறு அணையில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த மாதம் ஏப்ரல் 30ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 112.80 அடியாக இருந்தபோது துணை கண்காணிப்பு குழவினரால் ஆய்வு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது மத்திய நீர்வள ஆணைய செயற் பொறியாளர் சரவணக்குமார் தலைமையில் இன்று நீர்மட்டம் 112.45 அடியாக குறைந்துள்ள நிலையில் பெரியாறு அணையில் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை குமுளியிலுள்ள பெரியாறு அணைக் கண்காணிப்பு குழு அலுவலகத்தில் துணை ஆய்வுக் குழவினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அணையில் மேற்கொண்ட ஆய்வு குறித்த விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டு அதன் அறிக்கையை மூவர் கண்காணிப்புக் குழு தலைவர் குல்சன்ராஜ்க்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.