தேனி:முல்லைப் பெரியாறு அணையில் பருவகாலங்களின் போது ஏற்படும் மாற்றங்கள் குறித்தும், அணையின் பராமரிப்புப் பணிகள் குறித்தும் மத்திய நீர்வள துணைக் கண்காணிப்பு குழுவினா் இன்று (ஆகஸ்ட் 17) ஆய்வு செய்து வருகின்றனர்.
கடந்த மார்ச் 27 ஆம் தேதி மத்திய நீர்வள தலைமை கண்காணிப்பு குழுவினர் அணைக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ள அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர். அதனைத்தொடர்ந்து உச்சநீதிமன்றம் அணையை கண்காணித்து பராமரித்துக்கொள்ள மூவா் கொண்ட குழுவை நியமித்தது. மேலும் இந்த மூவா் உள்ள குழுவுக்கு உதவியாக 5 போ் கொண்ட துணைக் கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ள நிலையில் இன்று மத்திய நீர்வள துணைக் கண்காணிப்புக் குழு தலைவரான நீா்வள ஆணைய செயற்பொறியாளா் சதீஷ்குமாா், தமிழக பிரதிநிதிகளான பெரியாறு சிறப்பு கோட்ட செயற்பொறியாளா் சாம் இர்வின் , உதவி செயற்பொறியாளா் குமார் மற்றும் கேரள அரசின் பிரதிநிதிகளான கட்டப்பனை நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் அனில் குமார் உதவிப் பொறியாளா் அருண் ஆகியோர் கொண்ட குழுவினர் அணைப் பகுதியில் இன்று ஆய்வு செய்து வருகின்றனர்.