தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்களவை உறுப்பினரானார் ஓபிஎஸ் மகன்? கோயில் கல்வெட்டால் சர்ச்சை - தேனி மக்களவை தொகுதி

தேனி: தேர்தல் முடிவு வெளியாகும் முன்னரே, எம் பி ஓ.பி.ரவீந்திரநாத் குமார் என்று கோயில் கல்வெட்டில் பெயர் பொறிக்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது

மக்களவை உறுப்பினரானார் ஓபிஎஸ் மகன்? கோயில் கல்வெட்டால் சர்ச்சை

By

Published : May 17, 2019, 9:27 AM IST

Updated : May 17, 2019, 10:43 AM IST

தேனி மாவட்டம் குச்சனூரில் அமைந்துள்ள காசி ஸ்ரீ அன்னபூரணி கோயிலில் நேற்று ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அப்போது அந்த கோயிலுக்குள் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டில், ஆலயத்திற்கு பேருதவி புரிந்தவர்கள் என்று குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு துணை முதலமைச்சர் மற்றும் அவரது இளைய மகன் ஜெய பிரதீப்குமார் பெயர் இடம்பெற்றுள்ளது.

இவை அனைத்திற்கும் மேலாக, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் என்று கோயில் நிர்வாகத்தால் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிந்து இன்னும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படாமல், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் என்று கோயில் நிர்வாகம் எப்படி கல்வெட்டில் பெயர் பொறிக்கலாம் என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர்.

Last Updated : May 17, 2019, 10:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details