தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய வாய்ப்பு' - ஓபிஎஸ் தகவல்! - தேனி
தேனி: நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணைவதற்கு வாய்ப்பு உள்ளது என்று தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தொடர்ந்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி, சமூக நலம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம், சுகாதாரம், குடும்ப நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.2.45 கோடி மதிப்பீட்டில் தேனி மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட சேவை மையம், ஊராட்சி அலுவலகம், நூலகம், அங்கன்வாடி, ஆரம்ப சுகாதாரம் உள்ளிட்ட 12 கட்டடங்களை திறந்துவைத்தார்.
மேலும் பேரூராட்சிகள், சமூக நலம், ஊரக வளர்ச்சி, வேளாண், தோட்டக்கலை, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில், ரூ.16.89 கோடி மதிப்பீட்டில் அணைவருக்கும் வீடு கட்டும் திட்டம், அம்மா இருசக்கர வாகனங்கள், திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம், கூட்டுப் பண்ணை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ், 5,319 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளரிடம் அவர் கூறுகையில், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணைவதற்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார். மேலும் தேமுதிக உடனான கூட்டணி குறித்த கேள்விக்கும் அதே பதிலையே கூறினார்.