தேனி மாவட்டம் போடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட அரண்மனைப்புதூரில் இன்று (ஜன.20) திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்காக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று (ஜன.19) தேனி மாவட்டம் சென்றார். அப்போது அவருக்கு திமுக தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பழனிசாமியின் ஆட்சிக்கு முடிவு கட்ட தயார்: மு.க. ஸ்டாலின்
தேனி: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு முடிவு கட்ட தயார் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக ஸ்டாலின்
இதைத் தொடர்ந்து அவர் தெரிவித்ததாவது, "இன்னும் 4 மாதங்களில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும். திமுக ஆட்சிக்கு வரும். தற்போதுள்ள எடப்பாடியின் ஆட்சிக்கு முடிவு கட்ட நான் ரெடி? நீங்கள் ரெடியா?" என்றார்.
இதையும் படிங்க: யானைப் பசிக்கு சோளப் பொரியா? மழையால் பாதிக்கப்பட்ட ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் இழப்பீடு வழங்க கே எஸ் அழகிரி வலியுறுத்தல்!