தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எம்ஜிஆர் பிறந்தநாள் கொடி ஏற்றுவதில் குளறுபடி - இபிஎஸ், ஒபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல்!

எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு பெரியகுளத்தில் இபிஎஸ் தரப்பினர் தயார் செய்து வைத்திருந்த கொடியை ஓபிஎஸ் தரப்பினர் ஏற்றியதாக கூறப்படும் நிலையில், இருதரப்பினர் இடையே மோதல் வெடித்தது.

கொடி ஏற்றுவதில் இபிஎஸ், ஒபிஎஸ் தரப்பினர் இடையே மோதல்
கொடி ஏற்றுவதில் இபிஎஸ், ஒபிஎஸ் தரப்பினர் இடையே மோதல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 17, 2024, 1:45 PM IST

கொடி ஏற்றுவதில் இபிஎஸ், ஒபிஎஸ் தரப்பினர் இடையே மோதல்

தேனி: முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 107வது பிறந்த நாள் இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரால் அமைக்கப்பட்ட அதிமுக கொடிக்கம்பத்தில், தற்போதைய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கொடியேற்றுவதற்காக தயார் செய்து வைத்து இருந்தனர்.

இதனையடுத்து இபிஎஸ் ஆதராவாளர்கள் கொடிக்கம்பத்தில் தயார் செய்து வைத்திருந்த கொடியை, முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஏற்றி பறக்க விட்டனர். இதனைக் கண்ட அதிமுக இபிஎஸ் தரப்பினர் ஆத்திரமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது.

மேலும் இதில் அதிமுக இபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர், தேனி நகர செயலாளர் ஒன்றிய செயலாளர், மற்றும் முன்னாள் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் ஆகியோர் ஓபிஎஸ் தரப்பினர் ஏற்றிய கொடியை கொடி கம்பத்தில் ஏற்றி அவிழ்த்து விட்டனர். அதனை தொடர்ந்து கொடிக்கம்பத்தை சேதப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஈபிஎஸ், ஒபிஎஸ் தரப்பினர் இடையே மோதல் முற்றியது. இதனையடுத்து அங்கு கூடியிருந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானபடுத்தி மோதலை கட்டுப்படுத்தினர். இந்த நிகழ்வில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடப்பாடியை ஒழிகவென்றும், இபிஎஸ் தரப்பினர் ஓபிஎஸ் ஒழிகவென்று எதிர் எதிரே கோஷமிட்டனர். இதனால் பழைய பேருந்து நிலைய பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: தேனி கேரள எல்லையில் எரிந்த நிலையில் பாதிரியாரின் உடல் கண்டெடுப்பு!

ABOUT THE AUTHOR

...view details